Thursday, July 22, 2010

- பணவீக்கம்

பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையின் நிலை அதிகரிப்பதே ஆகும்.[1] விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனினின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவில் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம். [2] [3] விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். [4]


பணவீக்கத்தினால் ஏற்படும் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகளில்நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஆகிய இரண்டும் உண்டு. பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளில் பின்வருவன அடங்கும்: குறிப்பிட்ட காலத்திற்கு பணம் மற்றும் பணம் சார்ந்த பிற உருப்படிகளின் அசல் மதிப்பின் நிலைத் தன்மை இழப்பு; எதிர்கால பணவீக்கத்தைப் பற்றி உறுதியாகக் கணிக்க முடியாததால் முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கான ஊக்கம் குறைதல், மேலும் உயர் பணவீக்கத்தின் போது எதிர்காலத்தில் விலை ஏறும் என்று கருதி நுகர்வோர் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடும்பட்சத்தில் சரக்குகள் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரப் பின்னிறக்கங்கள் மட்டுப்படுத்தல், [5] மற்றும் கடனின் அசல் அளவைக் குறைப்பதன் மூலம் வழங்கப்படும் கடன் தள்ளுபடி ஆகியவை அதன் நேர்மறை விளைவுகளில் அடங்கும்.


மொத்தப் பண அளவின் அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் கட்டற்ற பணவீக்கத்திற்கும் காரணமாகின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். [6] எத்தகைய காரணிகள் பணவீக்க வீதங்களை, குறைவு முதல் மிதமான அளவுவில் கட்டுப்படுத்தி வைக்கும் என்பது பற்றிய கருத்துகளில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. குறைவான அல்லது மிதமான பணவீக்கம் என்பது, பொருள்கள் மற்றும் சேவைகளின் அசல் தேவையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலைகளில் கிடைக்கக்கூடிய அளிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் மொத்தப் பண அளவின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட அதிக வேகத்தில் பண இருப்பு அதிகரிப்பதே தொடர்ச்சியான நீண்ட கால பணவீக்கத்திற்குக் காரணம் என்பதே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். [7] [8]


இன்று, பெரும்பாலான மரபு வழி பொருளியலாளர்கள் குறைவான நிலையான பணவீக்க வீதத்தையே ஆதரிக்கின்றனர். [9] (பூச்சிய அல்லது எதிர்மறை பணவீக்கத்திற்கு மாறாக) குறைவான பணவீக்கமானது, ஒரு மோசமான வணிகச் சூழ்நிலையில் பணியாளர் சந்தையை தக்கவாறு சரி செய்வதன் மூலம் பொருளாதாரப் பின்னிறக்கங்களின் தீவிரத்தைக் குறைக்கிறது, மேலும் பணக்கொள்கையானது பொருளாதாரத்தைச் சீரமைப்பதை ஒரு நீர்மை செயலறு நிலை தடுக்கின்ற ஆபத்தையும் குறைக்கிறது. [10] பணவீக்க வீதத்தை, குறைவானதும் மற்றும் நிலையானதுமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பொறுப்பு வழக்கமாக பண ஆணையங்களிடம் வழங்கப்படுகிறது. பொதுவாக, இந்தப் பண ஆணையங்கள் என்பவை மத்திய வங்கிகளே ஆகும். அவை வட்டி வீதங்கள், திறந்த நிலைச் சந்தை செயல்பாடுகள் மற்றும் வங்கியியல் ரீதியான தேவையான ஒதுக்கீடுகளை அமைத்தல் ஆகிய வழிகளின் மூலம் மொத்தப் பண அளவைக் கட்டுப்படுத்துகின்றன. [11]



--
G. Narayanababu,

+91 98940 33334
+ 91 4546 260460


Motilal Oswal Securities Ltd.,
Solid Research Solid Advice.
45 & 47, Subban Street,
1st Floor Nandagopal Engg. works,
Theni 625 531.

http://narayanababu.blogspot.com
http://groups.google.co.in/group/narayanababu

Groupmail id : narayanababu@googlegroups.com